ஏனையவை
நாடாளுமன்ற உறுப்பினர் நாட்டு மக்களுக்கு வெளியிட்ட பேரிடியான தகவல்!

இலங்கையில் வட் வரி காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கூறுகையில், இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கான நிவாரணம் இல்லை.
இவ் வரவு-செலவுத் திட்டத்திற்கு முன்னர் VAT அறிமுகப்படுத்தப்பட்டதால் வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ளதாகவும் இதன் காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை அரச ஊழியருக்கு ஏப்ரல் மாதம் முதல் 10000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். மேலும் ஓய்வூதியர்களும் 2500 ரூபா கொடுப்பனவை பெறுவதற்கு ஏப்ரல் மாதம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது என கூறியுள்ளார்.