பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி இளம்பெண்ணின் தந்தையின் வேதனை மிக்க பதிவு!
இந்திய வம்சாவளி இளம்பெண் உட்பட மூவரை பிரித்தானியாவில் ஒருவர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இங்கிலாந்தின் நாட்டிங்காம் பல்கலை வளாகத்தில், கொல்லப்பட்ட பிள்ளைகளின் அஞ்சலி நிகழ்ச்சிக்காக 2,000க்கும் அதிகமான மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கூடினார்கள்.
அத்துடன், கொல்லப்பட்ட இளம்பெண்ணின் பெயர் கிரேஸ் குமார். கிரேஸும் (Grace O’Malley-Kumar, 19) அவரது நண்பரான பார்னீயும் (Barney Webber, 19) கொல்லப்பட்ட சம்பவம் பல்கலையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், கிரேஸுடைய தந்தை ஆற்றிய உரை நெகிழவைப்பதாக அமைந்திருந்தது. எங்கள் பிள்ளைகளுக்காக இப்படி கடல் போல் திரண்டிருக்கும் உங்களைக் காண்பது உங்களுக்குள் இருக்கும் பிணைப்பைக் காட்டுகிறது என்று கூறிய கிரேஸின் தந்தையான சஞ்சய் (Sanjoy), நீங்கள் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்ளவேண்டும். உங்கள் நண்பர்களை நீங்கள் கவனித்துக்கொள்ளவேண்டும் என்றார். இன்று இந்த அஞ்சலி நிகழ்ச்சிக்காக நீங்கள் கூடி உங்கள் அன்பைக் காட்டியிருக்கிறீர்கள், இதே அன்பு எல்லா இடங்களிலும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று என்ணுகிறேன் என சஞ்சய் கண்ணீருடன் கூற, அவரும், பார்னீயின் தந்தையும் ஒருவரையொருவர் கட்டியணைத்துக்கொண்டனர்.
சமீபத்தில், பெல்ஜியம் நாட்டவரான டேவிட் என்பவர் இறந்துபோனதாக தகவல் தெரியவந்ததையடுத்து, அவரது இறுதிச்சடங்குக்காக உறவினர்களும் நண்பர்களுமாக ஏராளமானோர் கூடியிருந்தார்கள். உண்மையில் அவர் மரணமடையவில்லை. தன்னை மறந்துபோன உறவினர்களுக்கு புத்தி வரச் செய்வதற்காக இறந்துபோனதாக நாடகமாடினார் அவர்.
மேலும், இறுதிச்சடங்குக்காக காத்திருந்தவர்கள் முன் சர்ப்ரைஸாக வந்திறங்கிய அவர், நான் உயிரோடு இருக்கும்போதே என்னை வந்து பார்க்கலாமே, ஏன் இறுதிச்சடங்கு வரை காத்திருக்கவேண்டும் என்பதை உங்களுக்கு உணர்த்துவதற்காகவ இப்படிச் செய்தேன் என்று கூற, வெட்கித் தலைகுனிந்தார்கள் இறுதிச்சடங்குக்காக வந்திருந்தவர்கள். கிரேஸின் தந்தை சஞ்சயும், டேவிடும் சொன்னதுபோலவே, இறுதிச்சடங்கில் மட்டுமே ஏன் அன்பைக் காட்டவேண்டும், அதை உயிரோடு இருக்கும்போதே அன்பைக் காட்டலாமே என்றே எண்ணத் தோன்றுகிறது!