இலங்கை மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவிக்கவுள்ள ஜனாதிபதி!

இலங்கையில் அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார். நிதியமைச்சர் என்ற வகையில் அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சம்பள அதிகரிப்பு நடவடிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனைய வரவு செலவுத் திட்டங்களைப் போன்று அல்லாமல் இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மக்களுக்கான திட்டங்களை ஸ்திரப்படுத்தும் நிவாரண வேலைத்திட்டம் வரவு செலவுத் திட்டத்தினூடாக அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார் என அவர் சுட்டிக்காட்டினார். 13,94,000 அரச ஊழியர்களின் சம்பளம் அதற்கேற்ப அதிகரிக்கப்படும் எனவும் அதுபற்றி வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி அறிவிப்பார் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பளத்தை அதிகரிக்குமாறு நிறுவனங்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.