இலங்கை

நாட்டில் வேகமாக அதிகரிக்கும் பெரிய வெங்காயத்தின் விலை : 3 மாதங்களுக்கு நெருக்கடி

இலங்கை சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 650 ரூபாவை தாண்டியுள்ளது. வெங்காய ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள இந்தியா, கடந்த டிசம்பர் 8ஆம் திகதி முதல் பெரிய வெங்காயம் ஏற்றுமதியை தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதால் வெங்காய விலை உயர்வு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை அடுத்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை அமல்படுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் பெரிய வெங்காயம் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதையடுத்து விலையை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால், இலங்கை, பங்களாதேஷ், மலேசியா, நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் பெரிய வெங்காயத்தின் விலை பெருமளவு அதிகரித்துள்ளன.

இதேவேளை, இலங்கையின் நுகர்வோரின் வருடாந்தம் பெரிய வெங்காயத்தின் தேவை சுமார் 280,000 மெற்றிக் தொன்களாகும். இந்த நாட்டில் சராசரியாக பெரிய வெங்காய உற்பத்தி சுமார் 125,000 மெட்ரிக் தொன்களாகும். மீதமுள்ள தேவையை இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. மழை, உரத் தட்டுப்பாடு, உரங்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் கடந்த பருவத்தில் பெரிய வெங்காயச் செய்கையை கைவிட்டதால் 2023ஆம் ஆண்டு அறுவடை 7851 மெற்றிக் தொன்களாக குறைந்துள்ளது.

Back to top button