இலங்கை
கிளிநொச்சியில் ஐந்தாவது நாளாகவும் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்!

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் 5ஆவது நாளாக இன்றும் இடம்பெற்றது.
குறித்த போராட்டம் இன்று காலை 10 முதல் இயக்கச்சி சத்தியில் அமைதியான முறையில் இடம்பெற்றது.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் இணைய வலியுறுத்தியே குறித்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.