ஆன்மிகம்

மகாலட்சுமியின் அருட்கடாட்சம் பெருக தை வெள்ளியில் செய்யவேண்டிய பூஜை

வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி தாயாரை பூஜை செய்வது பெரும் சிறப்பு பாக்கியம் என்று சொல்லலாம்.

வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் மகாலட்சுமி தாயாரை முறைப்படி வணங்கி வந்தால் என்றும் தரித்திரம் வறுமை அண்டாமல் செல்வ செழிப்போடு வாழ்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

அதிலும் சில வெள்ளிக்கிழமைகள் இந்த வழிபாட்டுக்கு மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது.

அந்த வகையில் தை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அனைத்துமே மகாலட்சுமி தாயார் வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் இன்று (02.02.2024)தை மாதத்தில் மூன்றாவது வெள்ளிக்கிழமை.

இந்த தினத்தில் மகாலட்சுமி தாயாரை இந்த முறையில் வழிபடும் போது நம்முடைய செல்வ வளம் மட்டுமின்றி கேட்பவர்கள் யாவும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

தை மாதம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயார் பூஜை இந்த வழிபாட்டை செய்வதற்கு வெள்ளிக்கிழமை அன்று காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்து பூஜைக்கு தயாராகி விட வேண்டும்.

அதன் பிறகு பூஜை அறையில் மகாலட்சுமி தாயாருக்கு உங்கள் கைகளாலே தொடுத்த மல்லிகை பூவை மாலையாக போடுங்கள்.

இந்த முறையில் நீங்கள் மாலை போட்டு தாயாரை வணங்கினாலே உங்கள் வீட்டில் செல்வத்துக்கு ஒரு நாளும் குறை இருக்காது என்று சொல்லப்படுகிறது.

இந்த வழிபாட்டின் போது தாயாருக்கு நெய்வேத்தியமாக பால் பாயாசம் செய்து வைக்க வேண்டும்.

இத்துடன் வெற்றிலை பாக்கு பூ பழம் போன்றவற்றையும் வைத்து விடுங்கள். இவையெல்லாம் செய்த பிறகு ஒரு சிறிய தட்டு அல்லது கிண்ணம் இரண்டில் ஏதேனும் ஒன்று எடுத்துக் கொண்டு அதில் முழுவதுமாக சில்லறை காசுகளை நிரப்பி விடுங்கள்.

அந்த சில்லறை காசுகளின் நடுவில் ஒரு எலுமிச்சை பழத்தை மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து விடுங்கள்.

ஒரு நெய் தீபத்தையும் மறக்காமல் ஏற்றி வைத்து விடுங்கள்.

இப்போது இந்த எலுமிச்சை பழத்துக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும்.

அதற்கு நல்ல தரமான குங்குமத்தை எடுத்துக் கொண்டு எலுமிச்சை பழத்தை மகாலட்சுமி தாயாராக பாவித்து குங்கும அர்ச்சனை செய்யுங்கள்.

அப்படி குங்கும அர்ச்சனை செய்யும் போது மகாலட்சுமி அஷ்டோத்திரம், மகாலட்சுமி நாமம் போன்றவற்றை சொல்ல வேண்டும்.

அதன் பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

இந்த பூஜை செய்த பிறகு ஐந்து சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் வழங்க வேண்டும்.

உங்கள் வீட்டிலே 5 சுமங்கலி பெண்கள் இருந்தால் அனைவரும் சேர்ந்து இந்த குங்குமரச்சனை பூஜை செய்வது பல மடங்கு பலனை தரும்.

வாய்ப்பு இல்லாதவர்கள் இப்படி ரவிக்கை துணியுடன் கூடிய தாம்பாளத்தை கொடுங்கள்.

இந்த முறையில் பூஜை செய்த குங்குமத்தில் குங்குமசிமிழில் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

தினந்தோறும் இந்த குங்குமத்தை மகாலட்சுமி தாயாரை நினைத்து நெற்றியில் திலகமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த வழிபாட்டை செய்யும் போது உங்களுக்கு என்ன தேவையோ அதை கேட்கலாம்.

அது நிச்சயம் கிடைக்கும் பொன் பொருள் பதவி என எதைக் கேட்டாலும் இந்த வழிபாட்டிற்கு இணங்கி மகாலட்சுமி தாயார் உங்களுக்கு அதை அருளுவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

Back to top button