இலங்கை

யாழ்ப்பாணத்தில் இளைஞரொருவரின் உயிரிழப்பு தொடர்பில் வெளியான காரணம்

அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். இருபாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞரே இவ்வாறு நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் உணவருந்தி விட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் நேற்று அதிகாலை 4 மணியளவில் அவரை அவதானித்தவேளை அவர் அசைவற்று காணப்பட்டுள்ளார்.

அதிக ஹெரோயின் பாவனை
இந்நிலையில் காலை 5 மணியளவில் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின்போது, அவர் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

Back to top button