இலங்கை
யாழ்ப்பாண மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள அறிக்கை!
இவ்வருடம் வடமாகாணத்தில் 1326 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தில் 1121 டெங்கு நோயளர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 51 பேரும், மன்னார் மாவட்டத்தில் 27 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 33 பேரும், வவுனியா மாவட்டத்தில் 94 பேரும் பதிவாகியுள்ளனர். இந்நிலையில் வடமாகாணத்தில் இதுவரை 02 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.