ஏனையவை

கடிகாரங்களை தோற்றுவித்தது யார் ?  – கடிகாரத்தின் கதை

காலத்தை வெல்ல  நினைக்கும் மனிதனின் முதல் படியே அவன் காலத்தை கணிக்க கற்றுக்கொண்டதுதான்,
கடிகாரம்.அல்லது மணிக்கூண்டு பரபரப்பான நேரத்திலும் இதனை பார்த்து நேரத்தை கணிப்பதில் மட்டும் எமது மூளை துரிதமாக இயங்கும்.

கடிகாரங்களை தோற்றுவித்தது யார்? அவை எப்படி உருவாயின?

காலத்தை தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் மனிதன் தோன்றும் போதே அவசியமாயிற்று வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே சுமேரியர்கள் நேரத்தை அளவிட முயன்றதாகவும், இதில் முன்னோடிகளாக விளங்கியவர்கள் அவர்களே என்றும் கருதப்படுகிறது. இவர்களே  ஒரு ஆண்டை மாதங்களாகவும், மாதத்தை நாட்களாகவும், ஒரு நாளைப் பல கூறுகளாகவும் பிரித்தது என்று ஒரு கூற்று நிலவி வருகிறது.

கடிகாரத்திற்கான அடித்தளம் சூரிய கடிகாரம் சூரிய மணி காட்டி என்பது சூரியனின் ஒளியினையும் அதன் விளைவாக நிகழும் நிழல்களின் நகர்வையும் அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டும் கடிகாரத்தினைக்குறிக்கும்.

உலகின் பல நாகரிகங்களை சமூகத்தினரும் நேரத்தை கணிக்க இயற்கையின் துணையோடு பலவகையான நேர கணிப்பான்களை உருவாக்கியுள்ளனர்.

 சூரியன் நகர்வதைப் பின்பற்றி 24 பெரிய கம்பங்களை வட்டப்பாதையில் நிறுவி, ஒளியும் நிழலும் அவற்றின் மீது விழுவதன் அடிப்படையில் எகிப்தியர்கள் நேரத்தை அளவிட்டனர்.

 கிரேக்க தேசத்தில் தண்ணீரைப் பயன்படுத்தி நேரத்தை அளவிடும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சாதனத்தில், தண்ணீர் ஒவ்வொரு துளியாக ஒரு கல் பாத்திரத்தில் விழுமாறு அமைக்கப்பட்டது. திரட்டபட்ட தண்ணிரின் அளவை அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டது.


இந்தநிலையில்தான் 14ஆம் நூற்றாண்டில்தான் கடிகாரம் (clock) என்ற வார்த்தை உபயோகத்திற்கு வந்தது. இது “க்ளோக்கா” என்ற லத்தீன் மொழியிலிருந்து எடுக்கப்பட்ட சொல்லாகும்.

அதே 14ஆம் நூற்றாண்டில்தான்  இயற்கை முறையிலான கால கணிப்பை தாண்டி நவீன முறைக்கு நகர்கிறது கடிகாரத்தின் வரலாறு,

கி.பி.1510-ம் ஆண்டுப் பகுதியில் ஜெர்மனைச் சேர்ந்த சார்ந்த பூட்டு செய்யும் தொழிலாளியான பீட்டர் ஹென்கின் என்பவர், நேரத்தைக் காட்டும் நின்ற நிலையிலான கடிகாரம் ஒன்றை உருவாக்கினார்.

பின்னர் 1656-ம் ஆண்டு வாக்கில் டச்சு நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர் ஹியூஜன்ஸ் என்பவர் ஊசல் (pendulum) அசைவில் இயங்கும் கடிகாரம் ஒன்றை உருவாக்கி நேரத்தை அளவிடும் முயற்சியில் வெற்றி பெற்றார். இவர் ஒரு நாளை 24 மணிகளாகவும், ஒரு மணியை 60 நிமிடங்களாகவும், ஒரு நிமிடத்தை 60 நொடிகளாகவும் பாகுபாடு செய்தார்.

புதிய முறைகளைப் பயன்படுத்திக் கடிகாரத்தையும் மேம்படுத்தினார். இப்போதுள்ள கடிகாரங்களெல்லாம் இதன் முன்னேறிய வடிவங்களேயாகும். துவக்கத்தில் இந்தக் கடிகாரத்தின் பகுதிகளெல்லாம் மரத்தில் செய்யப்பட்டவைகளாகவே இருந்தன. பின்னாளில் இப்பகுதிகள் உலோகத்தாலும், கண்ணாடியாலும் செய்யப்பட்டன.

கி.பி.1927-ல் கனடா நாட்டுத் தொலைத்தொடர்புத் துறையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் வாரன் மோரிசன் என்பவரால் கண்ணாடியால் ஆன கடிகாரம் ஒன்று உருவாக்கப்பட்டது. இது மிகக் குறைந்த காலத்திலேயே பெரிய வரவேற்பைப் பெற்றது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கம்வரை, ஊசல்களைப் பயன்படுத்தி இயங்கும் கடிகாரங்களே பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. சமச்சீராக அசையும் ஊசல், கடிகாரத்தின் இரு முட்களை இயக்கிச் சரியான நேரத்தைக் காட்டுவதற்குப் பயன்பட்டது. இவ்வகைக் கடிகாரங்களை இன்றும் ஆங்காங்கே காணலாம். ஆனால் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், ஊசல் கடிகாரங்கள் மாற்றமடைந்தன.

அலெக்சாண்டர் பெயின் என்பவர் 1840-ம் ஆண்டில் பாட்டரி (battery) என்னும் மின்கலத்தைப் பயன்படுத்தி இயங்கும் கடிகாரத்தைக் கண்டுபிடித்தார். பின்னர் பல அறிவியல் அறிஞர்கள் இவ்வகைக் கடிகாரத்தை மேம்படுத்தினர். பெரிய மின்கலங்களுக்குப் பதிலாகச் சின்னஞ்சிறு மின்கலங்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் எனப்படும் எச்.எம்.டி. தொழிலகம் இந்தியாவின் பழைய கடிகாரத் தொழிற்சாலைகளுள் ஒன்றாகும்.இத்தொழிலகம் கடிகாரங்களைத் தயாரிப்பதற்கு முன்பு பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட கடிகாரங்களே நம் நாட்டில் பயன்படுத்தப் பட்டன.

தற்போது இந்தியாவில் டைட்டான், டைமெக்ஸ், சிட்டிசன் போன்ற பல கம்பெனிகள் கடிகாரத் தயாரிப்பில் ஈடுபட்டு உலகத் தரத்திற்குக் கடிகாரங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.

இப்படி படிப்படியான வளர்ச்சிக்களுக்கு பின் கடிகாரம் முழு வடிவத்தை பெற்று விட்டாலும், அதன் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் இன்று வரையில் மாற்றங்கள் நிகழ்ந்து வருவது அதன் மீது நமக்கு இருக்கும் அபரிவிதமான மோகத்தை காட்டுகிறது.

டிஜிட்டல் கடிகாரங்கள் தோன்றி நேரம் பார்ப்பதை எளிதாக்கி, தற்போது lcd திரையை பயன்படுத்தும் அளவிற்கு இது வளர்ச்சி கண்டுள்ளது. கை கடிகாரங்களாக ஒரு பக்கம் தன் அளவை சுருக்கி கொள்ளும் இக்கடிகார கண்டுபிடிப்புகள், மணி கூண்டுகளாக தன் உருவ அளவை பெரிதாக்கும் கண்டுபிடிப்புகளிலும் முதன்மை பெறுவது தனி சிறப்பு.

உலகின் மிகப்பெரிய கடிகாரம் முஸ்லிம் களின் புனித தளமான மக்காவில், மக்கா அரசு கோபுரம் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கோபுரத்தின் உச்சியில் ஆறு கோபுர கடிகாரங்கள் பொறுத்தப்பட்டிருக்கிறது.

ஜெர்மனியில் தயாராகிய இக்கடிகாரம் 45 மீட்டர் அகலமும், 43 மீட்டர் உயரமும் கொண்டதாகி இருக்கிறது. இந்த கடிகாரங்களை இரவில் 17 கி.மீ தூரம் வரையிலும், பகலில் 12 முதல் 13 கி.மீ தூரம் வரையில் பார்க்க முடியும் மாம்

கைபேசிகளில்தான் நேரம் பார்ப்பது என்றாலும் கடிகாரங்கள் கைகளிலும் வீடுகளிலும் இன்றும்  இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றான. எப்போதும் உங்கள் கடிகாரங்கள் நல்ல நேரத்தையே காட்டட்டும்.

Back to top button