இலங்கை
இலங்கை ஜனாதிபதி எதிர்ப்பு போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ். வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் இடம்பெற்றிருந்தது.
தொடர்ந்து இடம்பெற்ற இப் போராட்டதில் பொலிஸாரால் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கலந்து கொள்ளும் பொங்கல் நிகழ்வு நல்லூர் சிவன் ஆலயத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி இடம்பெற்றபோது கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தப்பட்டது.