பெயர் புகழ் உண்டாகப்போகும் ராசியினர்; இன்றைய ராசிபலன்
சோபகிருது வருடம் மார்கழி மாதம் 9 ஆம் தேதி திங்கட்கிழமை 25.12.2023. சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 05.25 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி. இன்று இரவு 10.22 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம். சித்திரை சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
மேஷம் புதிய பொறுப்புகளை திட்டமிட்டு குழப்பமில்லாமல் ஏற்றுக்கொள்வீர்கள். பணியிடங்களில் பாராட்டும் பதவி உயர்வும் பெறுவீர்கள். அரசு ஊழியர்கள் அனுகூலமான பலனை அடைவீர்கள். குதூகலமாக குடும்பம் நடத்துவீர்கள். வியாபாரத்தில் இருந்த இடர்பாடுகளை விலக்குவீர்கள். குடும்பத்தில் திருமணத் தடைகள் நீங்கி வியாபாரத்தில் தனி வழியில் நடப்பீர்கள்.
ரிஷபம் வீட்டில் உள்ளவர்கள் மரியாதை குறைவாக பேசுவதால் மனம் நொந்து போவீர்கள். ஆவேசமான வார்த்தைகளை விடாதீர்கள். தொழிலுக்கு எதிராக செய்த சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். திருமணத்திற்காக பெண் தேடுவீர்கள். தொண்டை வலியால் அவதிப்படுவீர்கள். வலியச் சென்று தேவை இல்லாத சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். காதலியின் தேவையை நிறைவேற்றுவீர்கள்
மிதுனம் தேடிப் போனவரை சந்திக்க முடியாமல் ஏமாற்றம் அடைவீர்கள். குறுக்கு வழியில் இறங்கி அவமானப்படாதீர்கள். வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய உதவி தாமதமாவதால் தொழிலை விரிவுபடுத்த தயங்குவீர்கள். அரசாங்க வேலைகளில் சுணக்கத்தை எதிர் நோக்குவீர்கள். விபரமாகப் பேசுவதாக எண்ணி அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகி அவஸ்தைப்படாதீர்கள்.
கடகம் திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் திறமையை அனைவருக்கும் உணர்த்துவீர்கள். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையால் தொழிலை மேம்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகளின் அன்பை பெறுவீர்கள். விரும்பிய பெண்ணுக்கு காதல் தூது விடுவீர்கள். பெரியோர்களின் ஆசியால் திருமண பேச்சை தொடங்குவீர்கள்.
சிம்மம் வேலை இடத்தில் இருந்த எதிர்ப்புகளை வெற்றிகரமாக முறியடிப்பீர்கள். வியாபாரத்தை சீராக நடத்துவீர்கள். காலில் பட்ட அடிக்கு கட்டு போடுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் கடுமையான போட்டியை சந்திப்பீர்கள். கல்வியாளர்கள் மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் தொழிலில் மேன்மை அடைவீர்கள். வெளி வட்டாரங்களில் செல்வாக்கை உயர்த்துவீர்கள்.
கன்னி நண்பர்களுக்காக நெருங்கிய உறவினர்களை பகைத்துக் கொள்வீர்கள். தேடிவரும் வாய்ப்புகளை பயன்படுத்தாமல் அலட்சியப்படுத்தாதீர்கள். கோபத்தை வெளிப்படுத்தி காதலியை கண்ணீர் விடும்படி செய்யாதீர்கள். வியாபாரத்தில் இருந்த சிக்கல்களை தீர்ப்பீர்கள். வெளியூர் பயணங்கள் மூலம் புதிய ஆர்டர்களை பெறுவீர்கள்.
துலாம் வேண்டாத வாக்குவாதங்களை தவிர்த்து குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்குவீர்கள். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் எச்சரிக்கையாக பணி செய்வீர்கள். பைனான்ஸ் தொழிலில் அதிக பணத்தை முதலீடு செய்வீர்கள். வீண் சம்பத்திற்காக செலவு செய்யாதீர்கள். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். சந்திராஷ்டம நாள். எச்சரிக்கை தேவை.
விருச்சிகம் வீட்டை புதுப்பித்து அழகு பார்ப்பீர்கள். சுப காரியங்கள் சுணக்கமின்றி நடக்க குலதெய்வ நேர்த்தி கடனை பூர்த்தி செய்வீர்கள். பணப்பற்றாக்குறை மாறி பொருளாதாரம் மேம்பாடு கண்டு புளகாங்கிதம் அடைவீர்கள். தொழிலில் சீரான வளர்ச்சி காண்பீர்கள். பரம்பரை வியாபாரத்தில் நல்ல பலனைப் பார்ப்பீர்கள். வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வைத்தியம் செய்து கொள்வீர்கள்.
தனுசு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தை விலக்கி விடுங்கள். அரசு வேலைக்கான தேர்வு எழுதுவீர்கள். உங்கள் திறமைக்கு உரிய மதிப்பை அடைவீர்கள். மறைமுகமாக இருந்த எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். தொழில் கூடத்தில் சிறிய விபத்தில் சிக்குவீர்கள். அலைச்சலுக்குத் தகுந்த வருமானம் பார்ப்பீர்கள். அரசு ஊழியர்கள் சட்டமீறல் செய்யாதீர்கள்.
மகரம் தடையில்லாமல் முன்னேற முழுமையாக முயற்சி செய்வீர்கள். விரும்பியவளின் காதல் பார்வையில் சிக்கி வசமிழந்து போவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் அமோக லாபத்தை அடைவீர்கள். கட்டுமான தொழிலில் கை நிறைய சம்பாதிப்பீர்கள். விவசாயத்தில் இறங்கி நெல் உற்பத்தியை பெருக்குவீர்கள். குறித்த நேரத்தில் கடனை அடைத்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.
கும்பம் அலுவலகத்தில் அலட்சியமாக நடந்து கொண்டால் அவமானப்படுவீர்கள். ஆசை வார்த்தைகளில் மயங்கி கைப்பொருளை இழப்பீர்கள். அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு பெறுவீர்கள். திருமணத்திற்காக பெண்பார்க்கும் வேலையை தொடங்குவீர்கள். சிறு வாகன விபத்தில் சிக்குவீர்கள். சொத்து பிரச்சனைக்காக கோர்ட் வாசலில் நிற்பீர்கள்.
மீனம் வறட்டுக் கவுரவம் பார்த்து வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நிகழ்த்துவீர்கள். பூர்வீகச் சொத்து வழக்கில் விட்டுக்கொடுத்து போவீர்கள். மனதிலிருந்த இனம் தெரியாத பயத்தை விலக்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதியை கொண்டு வருவீர்கள். மூன்றாம் நபரை நம்பி புதிய முதலீடுகள் செய்தால் நஷ்டப்படுவீர்கள்.