உடல்நலம்

தினமும் கொய்யா சாப்பிட்டு வந்தால் நன்மை ஏராளம்!

பொதுவில் மலிவாக கிடைக்கும் கொய்யாப் பழத்தில் எண்ணற்ற மருத்துவ பண்புகள் கொண்டுள்ளன. இப்பழத்தில் வைட்டமின் சி, ஏ,இ அதிகமாக இருக்கிறது. மேலும் தாது சத்துக்களும் நிறைந்துள்ளன. மேலும், கொய்யாப்பழத்தில் லைகோபீன் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகின்றன. கொய்யாப்பழத்தில் காணப்படும் ஃபோலேட் கருவுறுத்தலை அதிகரிக்க உதவிச் செய்யும். கொய்யா பழத்தில் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம் –

1. தினமும் கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் உங்கள் எடை கணிசமாக குறையும்.

2. கொய்யாப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

3. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யா பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், கொய்யா பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.

4. தினமும் கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால், தொப்பையை குறைக்கும் ஆற்றல் கொண்டது.

5. நெஞ்சு எரிச்சல், புளியேப்பம் பிரச்சினை இருந்தால் கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

6. சருமம் மிகவும் அழகாக மாற வேண்டும் என்றால், தினமும் கொய்யா பழத்தை சாப்பிட்டு வரலாம்.

7. தினமும் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தத்தை சீராக்கும். நரம்பு தளர்ச்சியைப் போக்கும்.

8. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வேண்டும் என்றால், தினமும் கொய்யாப்பழத்தை சாப்பிட்டு வரலாம்.

9. வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு ஏற்பட்டால் கொய்யாப்பழத்தை சாப்பிடலாம்.

10. சர்க்கரை நோயாளிகள் தினமும் கொய்யாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் இன்சூலின்ஸ் அளவு கட்டுப்படும்.

Back to top button