உடல்நலம்

காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் நன்மைகள் ஏராளம்!

காலையில் தூங்கி எழுந்து பல் துலக்கிய கையுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது பல வகையான நன்மைகளை கொடுக்கும். காலை எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால் நிணநீர் ஆற்றல் பெறுகின்றன. இதனால் நோய் தொற்றுகளை தாக்கும் ஆற்றலை உடல் பெறுகிறது.

உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை

காலை எழுந்ததும் குடிக்கும் ஒரு கிளாஸ் தண்ணீராக இருந்தாலும் அது உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை வெளியேற்ற தூண்டும். ஒரு கிளாஸ் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கும்போது சருமத்திற்கு தேவையான நீரேற்றம் கிடைப்பதால் மென்மையான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம். அழகு கூடும்.

அசுத்த நீரை வியர்வையாக

தண்ணீரை குடிக்கும் போது வாய் வைத்தே குடிக்க வேண்டும். தண்ணீரை குடிப்பதனால் அது உடம்பில் உள்ள அசுத்த நீரை வியர்வையாக வெளியேற்றும். தண்ணீரை காலை எழுந்தவுடன் குடிக்க அது வாய் துர்நாற்றத்தை தடுக்கும் மற்றும் பற்களில் இருக்கும் நாசினிகளையையும் சேர்த்து வெளியேற்றும். உடலில் உள்ள மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உண்ணும் உணவு விரைவாக ஜீரணம் ஆகும். உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்கவும் தண்ணீர் உதவுகிறது.

Back to top button