உடல்நலம்

குளிர் காலத்தில் முட்டைக் கோஸ் சாப்பிட்டால் நன்மைகள் ஏராளம்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்களில் ஒன்றான முட்டைக்கோஸை குளிர் காலங்களில் சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். உலகளவில் விளையும் மிக முக்கிய காய்கறிகளில் முட்டைக்கோஸ் ஒன்றாகும். இது ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் காலே ஆகியவற்றை உள்ளடக்கிய க்ரூசிஃபெரே குடும்பத்தைச் சேர்ந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமின்றி செரிமானத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுஸாக இருக்கும் முட்டைக்கோஸ் குளிர்கால டயட்டிற்கு மிகவும் ஏற்ற காய்கறியாக இருக்கிறது. நீரிழிவு, உடல் எடை, பல நாள்பட்ட நோய்களின் தாக்கத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆனால் இவற்றை அதிகமாக யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை. முட்டைக் கோஸில் இருக்கும் சல்ஃபர் கன்டன்ட்டான சல்ஃபோராஃபேன் புற்றுநோயை எதிர்த்து போராடுவதுடன், செல்களின் வளர்ச்சியையும் தடுக்கின்றது. இதில் இருக்கும் பலவிதமான ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நாள்பட்ட அழற்சியை குறைப்பதுடன், முட்டைக்கோஸின் இலைகள் போலந்து நாட்டில் நாட்டு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றது.

மூட்டைக்கோஸில் நிறைந்திருக்கும் அந்தோசயனின்ஸ், வைட்டமின் கே, அயோடின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் சத்துக்கள் மூளைக்கு சக்திவாய்ந்த உணவாக இருக்கின்றது. அதிக பொட்டாசியம் நிறைந்த உணவுகள் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது. இந்த சத்து முட்டைக்கோஸில் இருப்பதால் உயர் ரத்த அளவை கட்டுக்குள் வைக்க முடியும்.

Back to top button