இலங்கை

இலங்கையில் வைத்தியர்களுக்கு நிலவும் மிகப் பெரிய பற்றாக்குறை! வழங்கப்படவுள்ள புதிய நியமனங்கள்

இலங்கையில் 3000இற்கும் மேற்பட்ட வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது. இதில், 600இற்கும் அதிக விசேட வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் விசேட வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறையால் சில வைத்தியசாலைகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த ஆண்டு இறுதிக்குள் 2000 வைத்தியர்கள் வைத்திய சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனூடாக விசேட வைத்திய நிபுணர்களுக்கு நிலவும் பற்றாக்குறை பிரச்சினை ஓரளவு நிவர்த்திக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும், விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியமையினால் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒரு வருட காலத்திற்குள் 274 வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டுச் சென்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அண்மையில் குறிப்பிட்டிருந்தது. குறித்த காலப் பகுதிக்குள் விசேட தரங்களை சேர்ந்த 842 வைத்திய அதிகாரிகளும் நாட்டை விட்டுச் சென்றுள்ளதாக அந்த சங்கம் மேலும் கூறியுள்ளது.

Back to top button