உடல் எடையை குறைக்க இந்த 5 கீரைகள் போதும்
பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை என்றால் அது அதிக உடல் எடை தான்.
உடல் எடையை குறைக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகள் அவசியம்.
அந்த வகையில் சில பச்சை இலை கீரைகளும், உடல் எடையை குறைக்க உதவுகின்றன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
பாலக்கீரை
பாலக்கீரையில் அதிகளவு புரதம், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடை இழப்பிற்கு அதிகளவில் உதவுகின்றன.
கடுகுக்கீரை
கடுகுக்கீரையில் வைட்டமின்கள் ஏ, சி, டி மற்றும் பி12, இரும்பு மற்றும் கால்சியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் எடை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கின்றன.
முளைக்கீரை
முளைக்கீரையில் வைட்டமின் ஏ, சி, இரும்பு மற்றும் மக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில் உள்ள ஏராளமான நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்தி உடல் எடை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கின்றன.
சர்க்கரவர்த்தி கீரை
குறைந்த கலோரிகள் கொண்ட சக்கரவர்த்தி கீரையில், நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.
மலபார் கீரை
வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ள மலபார் கீரை எடையைக் குறைக்க பெரிதளவில் உதவுகிறது. மேலும் ஆரோக்கியமான செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.