பிறப்பிலேயே அதிக மன தைரியம் கொண்ட ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்!

பல்வேறு விதமான குணாதிசயங்களைக் கொண்டவர்கள் மனிதர்கள். 12 ராசிகளுக்கும் ஏதோ ஒரு கிரகம் அதிபதியாக விளங்கும். பல குணாதிசயங்கள் கொண்டிருந்தாலும் கிரகங்களின் அடிப்படையில் 12 ராசிக்காரர்களும் சில சிறப்பான குணாதிசயங்களை பெற்றிருப்பார்கள். நவக்கிரகங்களின் செயல்பாடுகளை பொருத்தி ஒருவரின் ஜாதகம் அமையும் என கூறப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதற்கு சில காலமும் எடுத்துக் கொள்வார்கள் நவகிரகங்களின் இடமாற்றத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் உண்டாகும். இதனால் சில ராசிகள் நன்மைகளும் சில ராசிகள் தீமைகளும் பெறுவார்கள். அந்த வகையில் மிகவும் மன தைரியத்தோடு இருக்கக்கூடிய ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
மேஷ ராசி இயல்பாகவே சகிப்புத்தன்மை கொண்டவர்கள் இவர்கள் இருப்பார்கள். அச்சமில்லாத காரணத்தினால் அனைத்து விஷயங்களிலும் இறங்கி செய்யக் கூடியவர்கள். எத்தனை பெரிய ஆபத்துகள் வந்தாலும் சவால்களை எதிர்கொண்டு பயம் இல்லாமல் அதில் வெற்றி பெறக் கூடிய திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.
சிம்ம ராசி சிங்கம் போல எதிர்க்கும் திறன் கொண்டவர்கள் இந்த ராசியினர். அதனால் எப்போதும் ராஜாவாக திகழக்கூடிய மனப்பான்மை கொண்டவர்களாக வாழ்வார்கள். எத்தனை பெரிய கஷ்டங்கள் வந்தாலும் அதனை மன தைரியத்தோடு எதிர்கொண்டு வெற்றி காண்பவர்களாக இருப்பார்கள். பயம் இல்லாத தன்மை இவர்களுக்கு இயல்பிலேயே இருக்கும்.
தனுசு ராசி சாகச செயல்களில் எளிதாக ஈடுபடக் கூடியவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள். விரும்பாத செயல்களையும் கஷ்டப்பட்டு சவால்களை எதிர்கொண்டு வெற்றி காண்பார்கள். முழு நம்பிக்கையோடு தைரியமாக இறங்கும் திறன் கொண்டவர்கள், என்பதால் உங்களுக்கு வெற்றி கட்டாயம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
விருச்சிக ராசி மன உறுதியோடு இயல்பிலேயே செயல்பட கூடியவர்களே அந்த ராசியின். தவறான பார்வை அனைவரும் வைத்தாலும் இவர்களுடைய பார்வை வித்தியாசமாக இருக்கும். புதிய முயற்சியை மேற்கொண்டு கடினமான செயலையும் எளிதாக மாற்றக்கூடியவர்கள். எத்தனை தோல்விகள் வந்தாலும் மன தைரியத்தோடு ஈடுபட்டு திட்டத்தை நிறைவேற்றும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.