உடல்நலம்

மன நலத்தை மேம்படுத்த இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க

உடல் நலத்திற்கு உணவு முக்கியமாக இருக்கும் நிலையில், மன ஆரோக்கியத்திற்கும், உணவிற்கும் இடையே நெருங்கிய தொடர்பும் உள்ளது. மன அழுத்தத்தினை தூண்டக்கூடிய உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அதிக சர்க்கரை நிறைந்த உணவுகள் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை அதிகப்படுத்த கூடும். ஆகவே முடிந்த அளவு இதுபோன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மன அழுத்தத்தினை போக்கும் உணவுகள்
பெர்ரி பழங்களில் அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட்கள் இருப்பதால் செல் சேதத்தை தவிர்த்து மன அழுத்தத்தினை போக்குகின்றது.

முந்திரி பருப்பில் அதிகளவில் ஜிங்க் உள்ளதால் இவை பதட்டத்தை குறைக்க அதிகமாக உதவுகின்றது.

மெக்னீசியம் நிறைந்த பூசணி விதைகள், முட்டைகள் இவற்றினை நாம் சாப்பிடும் போது மனநலம் மேம்படுகின்றது.

முட்டையில் இருக்கும் டிரிப்டோபேன், செரட்டோனின் உற்பத்தியை தூண்டுகின்றது. இவை மனநிலையை மேம்படுத்த உதவும் ஹார்மோன் ஆகும்.

அவகேடோ என்று கூறப்படும் வெண்ணெய் பழத்தில் கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் பி6 நிறைந்துள்ளதால், இவை மன அழுத்தத்தினை குறைத்து ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்கின்றது.

இதே போன்று பச்சை இலை காய்கறிகள், சால்மீன் மீன் வகைகள், பால் சார்ந்த பொருட்கள் மனநிலை சம்பந்தமான கோளாறுகளில் இருந்து நிவாரணம் அளிக்கின்றது.

Back to top button