ஆன்மிகம்

இந்த ராசியினர் தவறியும் கறுப்பு கயிறு கட்டக்கூடாதாம்… காரணத்தை தெரிஞ்சிக்கோங்க

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே அனைத்து சாஸ்திரங்களும் தோற்றம் பொற்றுள்ளது. அந்த வகையில் இந்து சமய சாஸ்திரத்தில் கறுப்பு நிற கயிறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

இது சனிபகவானுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. பொதுவகவே நமது உடலில் காணப்படும் எதிர்மமறை ஆற்றல்களை நீக்கி நேர்மறை ஆற்றல்களை ஈர்ப்பதே கயிறு கட்டுவதற்கான காரணம்.

சாஸ்திரங்களின்படி, கறுப்பு கயிறு கட்டுவது தீய கண் பார்வையில் இருந்து தப்புவதற்கு ஒரு பாதுகாப்பு கவசமாகவே கருதப்படுகின்றது.

ஜோதிட சாஸ்திரப்படி கருப்பு கயிறு எல்லோருக்கும் நன்மையாக பலன்களை கொடுப்பதில்லை. எல்லோரும் அதைப் பயன்படுத்தக்கூடாது. கருப்பு கயிறு பயன்படுத்த சில விதிகள் உள்ளன.அவை தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

யாரெல்லாம் அணியலாம்?

ஜோதிட சாஸ்திரன் அடிப்படையில் கருப்பு கயிறு, கருப்பு நிறம், மகரம், துலாம், கும்பம் ராசியினருக்கு நல்லது. இந்த ராசிகளில் பிறந்தவர்கள் எந்த சந்தேகமும் இல்லாமல் கருப்பு நிற ஆடைகள் மற்றும் கருப்பு கயிறுகளை அணியலாம்.

விருச்சிகம் மற்றும் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு கருப்பு நிறம் ஒத்துபோகாது. ஜோதிட சாஸ்திரத்தின்படி செவ்வாய் இந்த விருச்சிகம் மற்றும் மேஷ ராசிகளையும் கட்டுப்படுத்துகிறது. எனவே கருப்பு அவர்களுக்கு நல்லதல்ல.

கருப்புக் கயிறு அணிந்தால் மனதில் நிச்சயமற்ற நிலை ஏற்படும். உயிருக்கு ஆபத்து ஏற்படும் என ஜோதிட நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இவற்றை முழுமையாக அறிந்து கறுப்பு கயிறு பயன்படுத்துவது நன்மை பயக்கும்.

Back to top button