இந்த ராசியினர் எவருடைய காலிலும் எதற்கும் விழக் கூடாதாம்!
நாம் அடுத்தவர்களுடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினால் நமக்கு நன்மை நடக்கும் என்று சொல்லுவார்கள். அதிலும் நம்முடைய பெரியவர்கள், வயதில் முதியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது ரொம்ப ரொம்ப நல்லது. ஆனால் அதற்கு நேர் எதிர் மாறாக இந்த மூன்று ராசிக்காரர்களும் யார் காலிலும் விழுந்து வணங்கக் கூடாது என்றும் நம்முடைய ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. அந்த மூன்று ராசிகள் யார் யார். அப்படி அந்த மூன்று ராசிகளையும் கொண்டவர்கள் அடுத்தவர்கள் காலில் விழுந்து வணங்கினால் அவர்களுக்கு எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில தகவல்களை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
மகரம், கும்பம், துலாம் இந்த 3 ராசிக்காரர்கள் அடுத்தவர்களுடைய காலில் விழுந்து வணங்கக் கூடாது. இவர்கள் யார் கால்களில் விழுந்து வணங்கலாம் என்று தெரியுமா. அம்மா அப்பா வீட்டில் இருப்பவர்கள் காலில் மட்டும் தான் இவர்கள் விழுந்து வணங்க வேண்டும். இவர்களுக்கான ஆசீர்வாதத்தை பெற வேண்டும். அதாவது இவர்கள் சொந்த பந்தங்கள் என்று இருப்பார்கள் அல்லவா அவர்களிடம் மட்டும்தான் நீங்கள் காலில் விழுந்த ஆசீர்வாதம் பெற வேண்டும்.
மற்றபடி வெளி ஆட்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், அவர்களுடைய காலில் விழுந்து வணங்கக்கூடாது. இறைவனின் பாதங்களில், அதாவது கோவிலில் விழுந்து வணங்குவது எல்லோருக்கும் பொதுப்படையான ஒரு விஷயம். கோவிலில் நீங்கள் இறைவனின் சந்நிதியில் நமஸ்காரம் செய்யலாம். அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இந்த மூன்று ராசிகளில் பிறந்தவர்கள் எல்லோர் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினால் என்ன பின் விளைவுகள் ஏற்படும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மை கிடைக்காமல் தள்ளிப் போகலாம். வாழ்வில் வரக்கூடிய முன்னேற்றங்கள் தடைபட வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. எதனால் இந்த மூன்று ராசிக்கும் இந்த நிபந்தனை. ஏன் இந்த மூன்று ராசியில் பிறந்தவர்கள் மட்டும் அடுத்தவர்களுடைய காலில் விழக்கூடாது. ஏனென்றால், இந்த மூன்று ராசிக்காரர்களும் சனிபகவானின் ஆதிகத்தில் உள்ளவர்கள். ஆகவே இவர்கள் அடுத்தவர்கள் காலில் விழக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. கூடுமானவரை இந்த மூன்று ராசியில் பிறந்தவர்கள் அடுத்தவர்கள் காலில் விழுந்து வணங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய காலில் மற்றவர்கள் யாராவது விழுந்து வணங்கினாலும் அதை தவிர்ப்பது நல்லது. காலில் யாராவது விழுந்து ஆசீர்வாதம் வாங்க வந்தால், இல்லை பரவாயில்லை, என்று சொல்லி அவர்களை அப்படியே நின்றபடி ஆசிர்வாதம் செய்து கொள்ளலாம். அடுத்தவர்கள் உங்களுடைய காலில் விழுவதற்கு நீங்க கொஞ்சம் அனுமதிக்காமல் இருப்பது நல்லது.
மேலும், சந்தர்ப்பம் சூழ்நிலையில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு செயலும் நமக்கு பெரியதாக பாதிப்பை உண்டாக்காது. ஆகவே அச்சச்சோ நாம் எல்லோர் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி விட்டோமே என்று நினைத்து பயப்படாதீங்க. மேல் சொன்ன விஷயங்களை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நம்பிக்கை உள்ளவர்கள் முடிந்தவரை மேல் சொன்ன விஷயங்களை பின்பற்று பாருங்கள். நிச்சயமாக வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.