இலங்கை
நாளை முதல் மூன்றாம் தவணை விடுமுறை!

இலங்கையில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மூன்றாம் தவணை (வெள்ளிக்கிழமை) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
க.பொ.த உயர்தர பரீட்சைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகி அடுத்த மாதம் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில்.
2022 பாடசாலை கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடைந்து பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.