உடல்நலம்

அடர்த்தியாக கூந்தல் வளர இந்த Aloe Vera ஒன்னு போதும்

பொதுவாக ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல நீளமான, அடர்த்தியான கூந்தலை பெற வேண்டும் என்பது பெரும் ஆசையாக இருக்கும்.

ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு இன்றைய காலத்தில் பொடுகு, முடி உதிர்தல் மற்றும் போன்ற முடி தொடர்பான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.

இதற்கு ​​சந்தையில் கிடைக்கும் பல தலைமுடி பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இது தற்காலிகம் தான். இதற்கு இயற்கை முறையில் கூட தீர்வு காண முடியும்.

அந்த வகையில் முடியை இயற்கையாக அடர்த்தியாக வளர வைக்க கற்றாழையை எவ்வாறு பயன்படுத்தலாம் என இந்த பதிவில் பார்க்கலா

கற்றாழை ஜெல்லை லாவெண்டர் அல்லது ரோஸ்மேரி எண்ணெய்யுடன் சேர்த்து கலந்து ஹேர் மாஸ்க்காக பயன்படுத்திக்கொள்ளலாம். 30 நிமிடங்களுக்கு பிறகே உங்களது முடியை அலசவேண்டும்.

Aloe vera மற்றும் தேங்காய் எண்ணெய்: அலோ வேரா ஜெல்லை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்ப்பதனால் முடிக்கு ஊட்டமளிக்கக்கூடும்.

அதை உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடியில் மசாஜ் செய்யதப்பின் ஒருமணிநேரம் கழித்து முடியை அலசவேண்டும்.

Aloe vera ஜூஸ் ரின்ஸ்: அலோ வேரா ஜெல்லை தண்ணீருடன் சேர்த்து இறுதியில் உங்கள் முடியை அலச பயன்படுத்திக்கொள்ளவும். இது pH நிலையை சமப்படுத்தவும், மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

Aloe vera மற்றும் தேன் உச்சந்தலை மசாஜ்: அலோ வேரா ஜெல்லை தேனுடன் சேர்த்து உங்களது உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்தவுடன் 20-30 நிமிடங்களுக்கு அதை விட்டு பின்னர் அலசவேண்டும்.

Aloe vera மற்றும் தயிர் ஹேர் பேக்: அலோ வேரா ஜெல்லை தயிருடன் சேர்ப்பதனால் ஒரு நீரேற்றத்தையுடைய ஹேர் பேக்கை உருவாக்க இயலும். உங்கள் முடியிலும், உச்சந்தலையிலும் தடவியப்பின் 45 நிமிடம் விட்டுவிட்டு பின்னர் நன்று அலசவும்.

Back to top button