உடல்நலம்

நீரிழிவு நோயைக் கட்டுக்குள் கொண்டு வர இது போதும்!

முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. முருங்கை மரத்தின் வேரிலிருந்து இலை வரைக்கும் அத்தனைமருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது.முருங்கைக் கீரையை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் எல்லா வகையில் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். இந்த முருங்கை கீரையில் சப்பாத்தி செய்து சாப்பிட்டால் சக்கரை நோயாளிகளுக்கு மருந்தே தேவையில்லையாம்.

தேவையான பொருட்கள்

சப்பாத்தி மாவு – 1 கப், முருங்கைக் கீரை – 1/4 கப் ,வெங்காயம் – 1 ,பூண்டு – 5, மஞ்சள் – 1 சிட்டிகை, உப்பு – தேவையான அளவு

செய்முறை   

வெங்காயம் மற்றும் முருங்கைக் கீரை மற்றும் பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். சப்பாத்தி மாவு பிசைய பாத்திரத்தில் மாவு போட்டு அதோடு உப்பு சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள். பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் , முருங்கைக் கீரை, மஞ்சள் , பூண்டு சேர்த்துக்கொள்ளுங்கள். தற்போது அனைத்தையும் கிளறி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து எப்போதும்போல் சப்பாத்திக்கு மாவு பிசைவதுபோல் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைத்து உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கல்லில் திரட்டி தோசைக் கல்லில் சுட்டு எடுத்தால் முருங்கைக் கீரை சப்பாத்தி தயார்.

Back to top button