ஆன்மிகம்

சனி பகவானை வழிபட சிறந்த நேரம் இதுதான்… பூஜையின் போது இந்த தவறை செய்யாதீர்கள்!

பொதுவாக சனாதன தர்மத்தில், ஒவ்வொரு கடவுள் மற்றும் தெய் வழிபாட்டிற்கு சில விதிகள் கொடுக்கப்படடுள்ள நிலையில், சனி பகவானை எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சனி பகவானை எவ்வாறு வழிபடுவது?
சனி பகவானை வழிபடும் போது முறையான சடங்குகள் அவசியமாகும். அப்பொழுது விரைவாக மகிழ்ச்சி அடைவதுடன், பக்தர்களின் தொல்லைகளையும் எளிதில் நீக்குவார் என்பது நம்பிக்கையாம். சாஸ்திரங்களின்படி, சூரிய உதயத்திற்கு முன்பும், சூரியன் மறைந்த பின்பும் சனி பகவானை வழிபடுவது சிறந்ததாகக் கருதப்படுகிறது.

இந்நேரத்தில் சனி பகவானை வழிபடுவதன் மூலம் பல ஆசீர்வாதங்களை தருவதுடன், பக்தர்களையும் மகிழ்ச்சியடைய வைக்கின்றார். சூரியன் உதிக்கும் நேரத்தில் சனிதேவரை வழிபடக் கூடாது என்பது ஐதீகம். ஏனெனில் தந்தை-மகன் உறவு இருந்தாலும், சனிக்கும் சூரியனுக்கும் இடையே பகை உணர்வு உள்ளதால், சூரிய அஸ்தமனத்திற்கு பின்போ அல்லது முன்போ வழிபாடு செய்ய வேண்டும்.

செய்யக்கூடாத தவறுகள்
நீங்கள் சனி பகவானை வணங்கும் அவருடைய கண்களை பார்த்து ஒருபோதும் வணங்கக்கூடாது, அவரது பாதத்தை நோக்கி வணங்கவும். கண்களைப் பார்த்தால், அது உங்கள் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

சனி தெய்வ வழிபாட்டின் போது மேற்கு நோக்கி வணங்க வேண்டும். பூஜையின் போது திசையை மனதில் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

சனி பகவானை வழிபடும் போது, அவருக்கு பிடித்தமான நீலம் அல்லது கருப்பு நிற ஆடை அணிந்து கொள்ளவும்… ஆனால் சிவப்பு நிற ஆடைகளை ஒருபோதும் அணியக்கூடாது.

அதே போன்று சனி பகவானின் கோவிலுக்கு செல்லும் போது முதுகை காட்டக்கூடாது, அவ்வாறு காட்டினால் கோபம் வரும்.

Back to top button