உடல்நலம்

வேகமாக முடிவளர இந்த ஒரே ஒரு பொருள் போதும்: இப்படி பயன்படுத்துங்கள்

தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். அந்தவகையில் நீண்ட, ஆரோக்கியமான முடியை பராமரிக்க இயற்கையான பொருட்களின் பயன்படுத்த வேண்டும். தலைமுடி வளர்ச்சியை வேகமாக அதிகரிக்க வெந்தயத்தை வைத்து இந்த ஹேர் சீரம் செய்து பயன்படுத்தி பாருங்கள்.

தேவையான பொருட்கள்
வெந்தயம் – 1 ஸ்பூன்
கருஞ்சீரகம் – 1 ஸ்பூன்
கிராம்பு – 5

செய்முறை
முதல் நாள் இரவே 2 டம்ளர் தண்ணீரில் கருஞ்சீரகம், வெந்தயம், கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்து இரவு முழுக்க ஊற வைக்க வேண்டும்.

அடுத்த நாள் காலையில் கைகளால் நன்கு பிசைந்து விடுங்கள். இதை அடிகனமான ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

2 டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளராக சுண்டும்வரை கொதிக்க விட வேண்டும். பின்பு இதை ஆறவிட்டு ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த சீரமை இரண்டு வகைகளில் பயன்படுத்தலாம். தலைக்கு குளித்த பிறகு அல்லது குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக கூந்தலுக்கு பயன்படுத்தலாம்.

Back to top button