உடல்நலம்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இந்த ஒரு கிழங்கு போதும்- மருத்துவர் கூறும் விளக்கம்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.

அதிலும், இரத்த சர்க்கரை அளவை குறைக்க ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சிகள் மற்றும் நடைப்பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.

அந்தவகையில், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் ஒடியன் கிழங்கு அதாவது பனங்கிழங்கு குறித்து மருத்துவர் சிவராமன் விளக்கமளித்துள்ளார்.

பனங்கிழங்கை நெடுக்கு வாட்டில் கிழித்து வெயிலில் காயவிடும்போது கிடைக்கும் உலர்ந்த கிழங்கு ஒடியல் எனப்படுகின்றது.

இந்த ஒடியலை நீண்ட காலம் வைத்துப் பயன்படுத்த முடியும்.

பொதுவாக ஒடியலை உரலில் இடித்து மாவாக்கி அதிலிருந்து பலவகையான உணவுப் பொருட்களைச் செய்து உண்கிறார்கள்.

கிழங்கு என்றாலே கட்டாயம் சர்க்கரை நோயாளிகள் அதனை தூரத்தில் தள்ளிவிடுவார்கள்.

ஏனெனில், கிழங்கில் உயர் கிளைசெமிக் உள்ளது. இது இரத்தத்தில் வேகமாக சர்க்கரை அளவை சேர்க்கக்கூடிய தன்மை கொண்டது.

ஆனால் இந்த பனங்கிழங்கு மெல்ல மெல்ல இரத்தத்தில் சர்க்கரையை தகர்த்தக்கூடியது.

இந்த பனங்கிழங்கு எனப்படும் ஒடியன் கிழங்கு மாவாகவும் கிடைக்கிறது.

நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் மாவுகளை பதிலாக இந்த பனங்கிழங்கு மாவை வாங்கி பயன்படுத்தி வர சர்க்கரையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

Back to top button