ஆன்மிகம்
கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் இத கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக இந்து மக்களின் பாரம்பரியத்தின் படி தீபாவளிக்கு அடுத்து வருவது கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இது போன்ற விரதங்கள் மிகவும் அற்புதமானது. அதே நேரத்தில் அதிக பலனை தரக்கூடிய விரதமாக பார்க்கப்படுகின்றது.
இந்த விரதத்தின் மூலம் முருகப்பெருமானை வழிபடுபவர்கள் வாழ்க்கையில் சகல விதமான நலன்களையும் கண்டிப்பான முறையில் பெறலாம் என பக்தர்கள் நம்புகிறார்கள்.
இந்த சஷ்டி விரதம் சரியாக ஆறு நாட்கள் இருக்க வேண்டும். மேலும் கடைசி ஆறாம் நாள் சூரசம்காரம் முடியும் அன்று பலர் விரதத்தை முடிப்பார்கள்.
அந்த வகையில் தீபவாளியை கொண்டாடமல் சஷ்டி விரதத்தை இருப்பவர்கள் சிறிய டிப்ஸ்களை தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.
சஷ்டி விரதம் எளிமையாக இருப்பது எப்படி?
- முதல் நாள் திங்கட்கிழமை எழுந்து காலையில் நன்றாக குளித்து விட்டு முருகப்பெருமானை வழிபட்டு பக்தியுடன் விளக்கேற்ற வேண்டும். இதன்போது வடக்கு திசை பார்த்து அமர்தல் அவசியம்.
- காலை மாலை என இரு வேளைகள் கந்த சஷ்டி கவசத்தை படிப்பது சிறந்தது.
- ஆறாம் நாள் கடைசியாக நன்றாக குளித்து விட்டு பூஜையறைக்குள் சென்று விளக்கேற்றிய பின்னர் சஷ்டி படித்து விட்டு அன்றைய நாள் முழுவதும் விரதம் இருக்கலாம்.
- முருக பெருமானை நினைத்து வழிபாடு செய்யலாம். ஆனால் எந்த கடவுளை வணங்கினாலும் உண்மையான வழிபாடாக இருந்தால் விரதம் முடியும் போது நல்ல பலன் கிடைக்கும்.