ஏனையவை

Tomato Thokku: காரசாரமான தக்காளி தொக்கு செய்வது எப்படி?

உணவு மனித வாழ்வில் இன்றியமையாத ஒரு தேவையாகும். அந்த வகையில் தினமும் எமது வீட்டில் அதிகமாக செய்யக்கூடிய உணவு இட்லி மற்றும் தோசை, இதற்கு பொதுவாக சட்னி சாம்பார் வைத்து சாப்பிடுவோம்.

ஆனால் தக்காளி தொக்கு வைத்து சாப்பிட்டு பாத்திருக்கீங்களா? இதற்காக சுவையான தக்காளி தொக்கு எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தக்காளியில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது.

தக்காளியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் வருவதை குறைக்கிறது.

தேவையான பொருட்கள்
தக்காளி – 500 கிராம்
இஞ்சி – அரை ஸ்பூன்
புளி – ஒரு ஸ்பூன்
பூண்டு பற்கள் – 4
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2
கறிவேப்பிலை – தேவையான அளவு
மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன்
சாம்பார் பொடி – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்

செய்யும் முறை
தக்காளியை கழுவி நன்றாக பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கொஞ்சம் எண்ணைய் ஊற்றி நறுக்கிய இஞ்சியையும் தக்காளியையும் சேர்த்து கொள்ளவும்.

பின் புளியை சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்க வேண்டும். பின் இது நன்றாக வெந்ததும் ஒரு கோப்பையில் மாற்றி ஆற வைக்க வேண்டும்.

பின்னர் இந்த வேகவைத்த தக்காளியை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஒரு மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவேண்டும்.

இதற்கு பின்னர் பூண்டை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அரைத்த தக்காளி கலவையை சேர்த்து தாளிக்கும் போது அதனுடன் கறிவேப்பிலையை சேர்க்கவும்.

பின்னர் இதனுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் மற்றும் மிளகாய்த்தூள் என்பவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் சாம்பார் பொடி மற்றும் கால் கப் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் 5 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். இந்த 5 நிமிடங்களுக்கு பின் இறக்கினால் சுவையான தக்காளி தொக்கு தயார்.

இதனை இட்லி தோசைக்கு நீங்கள் வைத்து உண்ணலாம்.

Back to top button