உடல்நலம்

உடல் வலுவிற்கும் ஆரோக்கியத்திற்கும் பாரம்பரிய முறையில் உளுந்து துவையல்: எப்படி செய்வது?

உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.

உளுந்தை பயன்படுத்தி ஆரோக்கியமான பாரம்பரிய முறையில் உளுந்து துவையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய்- 3 ஸ்பூன்
சீரகம்- 1 ஸ்பூன்
தனியா- 3 ஸ்பூன்
உளுந்து- 5 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 15
கருவேப்பிலை- 1 கொத்து
பூண்டு- 1 கைப்பிடி
தக்காளி- 2
புளி- எலுமிச்சை அளவு
பெருங்காய தூள்- 1 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
வெல்லம்- 1 ஸ்பூன்
கடுகு- 1 ஸ்பூன்
வெங்காயம்- 1

செய்முறை
முதலில் ஒரு வாணலில் நல்லெண்ணெய் சேர்த்து அதில் சீரகம், தனியா மற்றும் உளுந்து சேர்த்து மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பின் அதே வாணலில் உள்ள எண்ணெயில் காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து பொரிந்தவுடன் பூண்டு, நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் அதில் புளி, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கி ஆறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

இறுதியாக இதை ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிது தண்ணீர், உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கருவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்த தொகையலை தாளிக்க வேண்டும்.

அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து கிளறி சூடான சாதத்தில் பிணைந்து சாப்பிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button