இலங்கை
யாழ்பாணத்திற்கான புகையிரத சேவை அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டது!

வட பகுதிக்கான புகையிரத பாதைகளின் நவீனமயமாக்கல் மற்றும் திருத்த வேலைகள் காரணமாக இன்று முதல் கொழும்பிலிருந்து இருந்து யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வரை செல்லும் புகையிரதங்கள் அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை புகையிரத திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
குறித்த புகையிரத வீதியை நவீனப்படுத்துவதற்கு சுமார் 05 மாதங்கள் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.