இலங்கை

கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை எதிர்வரும் பெப்ரவரி 16 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென் மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் சமர்ப்பித்த தனிப்பட்ட மனு நேற்று (17) கொழும்பு மேலதிக நீதவான்  ஹர்ஷன கெகுனவல முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைக்க கப்ரால் தரப்புக்கு பிப்ரவரி 16ஆம் திகதி வரை நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய அஜித் நிவார்ட் கப்ரால் பொது நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக அவருக்கு எதிராக இந்த தனிப்பட்ட மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Back to top button