ஏனையவை

வெண் பொங்கலை இப்படி செய்து பாருங்க

பொங்கல் என்பது பெரும்பாலும் தென்னிந்திய மற்றும் இலங்கையில் செய்யப்படும் உணவாகும். இது கொதிக்கும் பாலில் சமைக்கப்படும். இது பொங்கல் பண்டிகையுடன் தொடர்புடைய ஒரு உணவு முறையாகும். இதை ஒரு சிலர் காலை உணவாகவும் எடுத்துக்கொள்கிறார்கள். இந்த பொங்காலானது தூக்கத்தை தூண்டக்கூடியது. தமிழ் உணவு வகைகளில் வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், கோழிப் பொங்கல் மற்றும் சன்யாசிப் பொங்கல் ஆகியவை இருக்கின்றது. உணவகம் சுவையில் வெண் பொங்கலை வீட்டிலையே சுலபமாகவும் ருசியாகவும் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 கப்

பாசிப்பருப்பு – ½ கப்

மிளகு – 1 தேக்கரண்டி

சீரகம் – 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை

இஞ்சி- 1 துண்டு

பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி

பச்சை மிளகாய் – 3

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

முந்திரி பருப்பு

செய்முறை
அரிசி மற்றும் பருப்பை 2 நிமிடம் மிதமான சூட்டில் வறுத்து எடுத்து அதை தண்ணீரில் சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.

பின்னர் ஒரு குக்கரில் நெய், பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சைமிளகாய் உள்ளிட்டவை சேர்த்து தாளிக்கவும்.

ஊறவைத்த அரிசியை நன்கு கழுவி எடுத்து இதனுடன் சேர்க்கவேண்டும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து சரியாக 5 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

இதை குக்கரில் வைத்து 4 விசில் வந்ததும் இறக்கியாதும் பொங்கல் கொழைவாக பொங்கி வரும்.

இறுதியாக காடையில் எண்ணெய் ஊற்றி அத்துடன் வறுத்த முந்திரி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதை பொங்கலில் சேர்த்து நன்கு கலந்து எடுத்தால் சுவையான வெண் பொங்கல் தயார்.

Back to top button