ஏனையவை

உங்களுடைய கோபத்தை குறைக்க இந்த வாஸ்து டிப்ஸை ட்ரை பண்ணுங்க

பொதுவாக எல்லா விடயங்களளுக்கும் வாஸ்து சாஸ்திரத்தில் சில முறைகள் காணப்படுகின்றது. அந்தவகையில் அடிக்கடி கோபம் வருவதற்கும் வாஸ்துவில் காரணங்கள் கூறப்படுகினறது.

நாம் வீட்டு சூழல் சில சமயம் எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதாக அமையும். இவ்வாறான நிலைமை உங்களை உளவியல் ரீதியாக பாதிப்பதுடன் வீட்டிற்கும் துர்திஷ்டத்தை கொண்டுவரும் என வாஸ்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அந்த வகையில் வாஸ்துவில் குறைபாடுகள் இருந்தால், கோபத்தை கட்டுப்படுத்த முடியாது, இப்போது அடிக்கடி கோபப்படுபவர்கள் என்ன வாஸ்து விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வீடு கட்டுவது வாஸ்து படி இல்லாவிட்டால், வீட்டில் இருப்பவர்களின் உடல் நலம் பாதிக்கப்படும் என்பது நம்பிக்கை. வாஸ்து நிபுணர்களும் இதையே குறிப்பிடுகின்றார்கள்.

வாஸ்து உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். வாஸ்து விதிகள் பின்பற்றப்படாவிட்டாலோ அல்லது ஏதேனும் வாஸ்துவில் தவறுகள் இருந்தாலோ அது வீட்டில் வசிப்பவர்களின் மன ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.

வீடு மிகவும் அழுக்காக இருந்தால், நீங்கள் எப்போதும் கோபப்படுவீர்கள் என்று கூறப்படுகிறது. எனவே முடிந்தவரை வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

மேலும், காலையில் எழுந்ததும் கைகளை ஒன்றாக சேர்த்து உள்ளங்கைகளை 5 நிமிடம் பார்த்துக்கொள்வதன் மூலம் மனம் அமைதியடைகின்றது.

இதன் பின்னர் இஷ்ட தெய்வத்தை மனதில் பிராத்தனை செய்துவிட்டு நாளை ஆரம்பிப்பது மிகவும் மகிழ்சியை கொடுப்படுடன் போபத்தையும் குறைக்கின்றது.

மன உளைச்சலை குறைக்கவும், கோபம் வராமல் இருக்கவும் எந்த சூழ்நிலையிலும் தென்கிழக்கு திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது என்பது ஐதீகம். இந்த திசையில் தலை வைத்து தூங்கினால் கோபம் அதிகரிக்கும்.

நீங்கள் எப்போதும் கோபமாக இருந்தால், வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் வீட்டின் கிழக்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் நீங்கி மனம் அமைதியாக இருக்கும்.

வீட்டில் உள்ள சுவர்களின் நிறமும் நமது மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது. எந்த சூழ்நிலையிலும் வீட்டில் சுவர்களில் அடர் நிறங்களை பயன்படுத்த கூடாது.அத்தகைய நிறங்கள் இருந்தால், எப்போதும் எரிச்சலும் கோபமும் இருக்கும்.

எப்பொழுதும் கோபமாக இருக்கும் போது கல் உப்பை ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரில் போட்டு அறையின் ஒரு மூலையில் வைக்க வேண்டும். இது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்கி கோபத்தை குறைக்க துணைப்புரிகின்றது.

Back to top button