ஏனையவை

சுலபமான முறையில் தேங்காய் பர்பி இப்படி செஞ்சு பாருங்க

தீபாவளி என்றாலே தித்திப்புடன் கொண்டாட வேண்டிய ஒரு பண்டிகையாகும். இந்நாளில் வீட்டில் பல இனிப்பு பண்டங்களை செய்து உறவினர்களுடன் பகிர்ந்து சாப்பிடுவது வழக்கம். ஆகவே வீட்டில் இருக்கும் ஒரு சில எளிய பொருட்களை வைத்து எப்படி ஈசியான முறையில் தேங்காய் பர்பி செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
தேங்காய் – 2 கப்

சர்க்கரை – 2 கப்

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் – அரை ஸ்பூன்

முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்

பால் – 2 கப்

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில் முந்திரியையும் சேர்த்து வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

Oil Paper எடுத்து ஒரு தட்டில் நெய் தடவி அதில் பேப்ரை விரித்து வைக்கவும்.

பின் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, தேங்காய் மற்றும் பாலை ஊற்றி கெட்டியாகும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

அடுத்து சர்க்கரை சேர்த்து, கிளறவேண்டும். சர்க்கரை உருகி தேங்காயுடன் கலந்து வரும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.

பின் அந்த கலவையுடன் நெய் சேர்த்து கிளறவும். அதிகம் ஈரப்பதம் உள்ளதா என்பதை சரிபார்த்து நன்றாக கெட்டியாகி வரும் வரை கிளறவேண்டும்.

அடுத்ததாக அடுப்பில் இருந்து எடுத்து ஏலக்காய் பொடி தூவி, நெய் தடவி விரித்த பேப்பர் தட்டில் இதை பரப்பி விடவும்.

பின் வறுத்து வைத்த முந்திரியை தூவி, சதுர வடிவ துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

இதை அறை வெப்பநிலையிலே 8 முதல் 10 மணி நேரம் வரை வைத்திருக்க வேண்டும். மேலும் ஒரு கிழமை வரை பாவிக்கலாம்.

Back to top button