ஏனையவை

பொடுகு தொல்லையிலிருந்து விடுபட இந்த எளிய பாட்டி வைத்தியத்தை செய்து பாருங்க

பொதுவாகவே அனைவருக்கும் பொடுகு தொல்லை என்பது அதிகமாகவே இருக்கும். இது எதனால் ஏற்படுகிறது என்று தெரியாமல் பலரும் பல விதமான விடயங்களை செய்து பார்ப்பார்கள். ஆகவே எப்போதும் நமது உடலுக்கு சக்தியை தரக்கூடிய பாட்டி வைத்தியம் வைத்து எப்படி பொடுகு தொல்லையை அழிக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

பொடுகு வர காரணம்
வறட்சியான சருமத்தினால் வரும்.

தண்ணீர், சோ்பபு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடுவதால் வரும்.

எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருந்தால் வரும்.

தலையில் வியர்வை உற்பத்தியாகுவதால் வரும்.

நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு வரலாம்.

மனஅழுத்தம், கவலையாலும் இது வரலாம்.

அதிகமாக சாம்பு பயன்படுத்தினாலும் பொடுகு வரலாம்.
பொடுகு தொல்லைக்கு அஞ்சத்தேவையில்லை! எளிய பாட்டி வைத்தியம் செய்து பாருங்க | How To Remove Dandruff

தேவையான பொருட்கள்
தேங்காய் பால் – 1/2 கப்

எலுமிச்சை சாறு – 4 தேக்கரண்டி

வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்தது

பயன்படுத்தும் முறை
மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்துவந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

பசலைக் கீரையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.

1 கப் தயிருடன் 2 டீஸ்பூன் மிளகுத்தூளை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதை தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து தலையை கழுவவும்.

இரவில் படுக்கும் முன்பு ஓலிவ் ஆயிலை சூடேற்றி, ஸ்கால்ப்பில் தடவி, 20 நிமிடம் நன்கு மசாஜ் செய்து, பின் தூங்க வேண்டும். காலையில் குளித்தால் பொடுகு நீங்கும்.

ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 2 டேபிள் ஸ்பூன் பூண்டின் பற்களை அரைத்து கலந்து, தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின்பு குளிக்க வேண்டும்.

வெங்காயத்தை அரைத்து தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால், தலையில் உள்ள பொடுகு முற்றிலும் போய்விடும்.

Back to top button