பிரான்ஸ்

பிரான்ஸ் மக்களை பதற வைத்துள்ள சுனாமி எச்சரிக்கை! – பசிபிக் கடலில் நிலநடுக்கம்

நேற்று பிரான்சுக்கு சொந்தமான பிராந்தியமான New Caledoniaவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட விடயம் மக்களுக்கு பதற்றத்தை உருவாக்கியது. நேற்று வெள்ளிகிழமை, பசிபிக் கடலில் New Caledonia அமைந்துள்ள பகுதிக்கு அருகில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது.

மேலும், ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான அந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, New Caledonia உட்பட அப்பகுதியிலுள்ள சில தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பசிபிக் கடலில் நிலநடுக்கம்: பிரெஞ்சுத் தீவு மக்களை பதறவைத்த செய்தி | Earthquake In Pacific தணிந்த பதற்றம் சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து அலைகள் ஒரு மீற்றர் முதல் இரண்டு மீற்றர் உயரத்திற்கு எழுந்ததாக சிலர் கூறும் நிலையில், பாதுகாப்பு கருதி உயரமான இடங்களுக்கு விரைந்தனர் மக்கள். இதற்கிடையில், சுனாமி எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. கிடைத்த தரவுகளின் அடிப்படையில், நிலநடுக்கத்தின் காரணமாக விடுக்கப்பட்டிருந்த சுனாமி அபாயம் கடந்து சென்றுவிட்டதால், சுனாமி எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

Back to top button