இலங்கை
வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருவர் காயம்

வவுனியாவில் ஓயார்சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று (06.12) இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா, ஓயார்சின்னக்குளம் பகுதிக்கு இரவு வாகனம் ஒன்றில் மதுபோதையில் வந்த குழுவினர் அங்கு நின்ற இருவரை துரத்தித் துரத்தி வாளால் வெட்டியுள்ளனர்.
இந்நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.