இலங்கை

பாடசாலை மதில் திடீரென இடிந்து விழுந்ததில் மாணவர்கள் இருவர் காயம்

சிலாபம் – அம்பகதவில பாடசாலையின் மதில் இடிந்து வீழ்ந்ததில் இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் ஹலவத்தை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹலவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவர்கள் இருவரும் இன்று (12) காலை பாடசாலையின் நுழைவாயிலில் ஏறி விளையாடிக்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரு மாணவர்களில் ஒருவர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் மற்றைய மாணவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Back to top button