இலங்கை
சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த துரித நடவடிக்கை – நீதி அமைச்சர்

சில சமூக ஊடக பதிவுகளில் மத நம்பிக்கைகளுக்கு அவதூறு தெரிவிக்கும் வகையில் கருத்து வெளியிடப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் அமைதி மற்றும் இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மத தலைவர்களை அவமதிக்கும் வகையிலும் இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் சிலர் சமூக ஊடகங்களில் பதிவுகளை இட்டு வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.