இலங்கை
2023 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு அவசர அறிவிப்பு!

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களுக்கு அறிவித்துள்ளது. அந்த வகையில் குறித்த விண்ணப்பங்களை நேற்று 7 ஆம் திகதி முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகள் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.