குதிகால் வெடிப்பைப் போக்க இந்த டிப்ஸ யூஸ் பண்ணுங்க!
ஈரப்பதம் இல்லாததால் குதிகால் உலர்ந்து போகுதல் அல்லது விரிசல் போன்றவை ஏற்படும்.
கால்களை ஈரப்பதமாக்குவது குதிகால் வெடிப்பை அகற்றுவதற்காக வீட்டு சில வைத்தியங்கள் உள்ளன.
குதிகால் பகுதியில் ஒரு நல்ல மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக குளித்த பிறகு பயன்படுத்துவது, குதிகால் வெடிப்பைப் போக்க உதவும்.
அதற்கான சில டிப்ஸ
உங்கள் கால்களை வெதுவெதுப்பான நீர் மற்றும் லேசான சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். அவற்றை மெதுவாக மசாஜ் செய்யவும்.
தேங்காய் எண்ணெய் நீண்ட காலமாக சருமத்தை ஈரப்பதமாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, வெடிப்புள்ள குதிகால்களிலும் இதைப் பயன்படுத்தலாம்.
தேன், தயிர், வாழைப்பழத் தோல்கள் மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றைப் பயன்படுத்தி வீட்டில் கால் மாஸ்க் தயாரிக்கலாம். இதை உங்கள் காலில் தடவி 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
உங்கள் கால்களை வெதுவெதுப்பான நீரில் 15 முதல் 20 நிமிடங்கள் ஊறவைத்த பிறகு, அவற்றை மெதுவாக உலர வைக்க வேண்டும். பின்னர் படுக்கைக்குச் செல்வதற்கு முன் சாக்ஸ் அணிந்து கொள்ளுங்கள்.
குதிகால் வெடிப்புக்காக கோகம் வெண்ணெயை நேரடியாக உங்கள் குதிகால் மீது தடவலாம். நீங்கள் கோகம் வெண்ணெய் தடவி, பின்னர் பருத்தி சாக்ஸ் அணியலாம்.