தலை முடியை பராமரிக்க ஒரு நாளாவது இதை பயன்படுத்துங்க
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது முடியை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் ஒரு ஆசை இருக்கும். இயற்கையான கூந்தலுக்கு வீட்டில் கண்டிஷனரை உருவாக்குவது மிகவும் சிறந்த விடயமாகும். அன்றாட வாழ்வில் நாம் அனைவரும் முடியை பராமரிப்பதில் கவனம் செலுத்துவதை குறைத்து விடுகிறோம். ஆகவே இயற்கையான நன்மைகள் தரக்கூடிய கண்டிஷனரை எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.
வீட்டில் தயாரிக்கப்பட்ட கண்டிஷனர்கள்
1. அவகேடோ & தேங்காய்
தேவையான பொருட்கள்: 1 அவகேடோ, தேங்காய் எண்ணெய் 2 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி, லாவெண்டர் எண்ணெயின் 5-7 சொட்டுகள்
செய்முறை அவகேடோ பழத்தை கிரீம் வரும் வரை மசிக்கவும். தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். பின் லாவெண்டர் எண்ணெயின் சொட்டுகளை சேர்த்துக்கொள்ளவும். 20-30 நிமிடங்கள் விட்டு, பின்னர் நன்கு கழுவவும்.
2. வாழைப்பழம் & தயிர்
தேவையான பொருட்கள்: 2 பழுத்த வாழைப்பழங்கள் 1/4 கப் தயிர் 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஒரு துளி எலுமிச்சை சாறு
செய்முறை வாழைப்பழங்கள், தயிர் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை கலந்துக்கொள்ளவும். எலுமிச்சை சாற்றை ஒரு துளி சேர்த்துக் கொள்ளவும். தலையில் பூசி 30-40 நிமிடங்கள் வைத்து பின் கழுவவும்.
3. முட்டை & ஆமணக்கு எண்ணெய்
தேவையான பொருட்கள்: 2 முட்டைகள் 2 ,தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய் , 1 தேக்கரண்டிவினிகர்
செய்முறை முட்டைகளை நன்றாக அடித்துக்கொள்ளவும். ஆமணக்கு எண்ணெய் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்துக்கொள்ளவும். உங்கள் முடி தேய்த்து மெதுவாக மசாஜ் செய்யவும். 15-20 நிமிடங்கள் விட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.