ஏனையவை

நீளமான கூந்தலுக்கு இந்த ஹேர்பேக்கை பயன்படுத்துங்க

பொதுவாக நீண்ட அடர்தியான கூந்தல் என்றாலே நாம் நினைவுக்கு வருவது கேரளா பெண்கள் தான். கேரளாவில் இருக்கும் பெண்களின் கூந்தல் நீளமாகவும் அடர்த்தியாக இருக்கும்.

இதை பார்ப்பதற்கே நமக்கு ஆச்சரியமாகவும், ஏக்கமாகவும் இருக்கும். உண்மையிலேயே இவர்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை தான் பயன்படுத்துகிறார்கள்.

தற்போது கேரளா பெண்களை போல நீளமான கூந்தலை பெற வீட்டில் இருக்கும் சில பொருட்களை கொண்டு ஒரு ஹேர்பேக்கை தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்
அரிசி- 2 ஸ்பூன்
தண்ணீர்- 3 டம்ளர்
செம்பருத்தி இலை- 5
செம்பருத்தி பூ- 4
விளக்கெண்ணெய்- 1 டீஸ்பூன்

செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரிசியை சேர்த்து இரண்டு முறை கழுவி பின் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.

அரிசி பாதி வெந்து வந்ததும் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள செம்பருத்தி பூ மற்றும் செம்பருத்தி இலை சேர்த்து 15 நிமிடங்கள் நன்கு கொதிக்கவைக்கவும்.

பின் அதனை நன்கு ஆறவைத்து ஒரு சின்ன பாத்திரத்தில் வடிக்கட்டி எடுத்துக்கொள்ளவும்.

இதனில் 2 டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து உச்சந்தலை முழுக்க இதை தடவி நன்கு மசாஜ் செய்யவும்.

பின் அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு பின் தலைமுடியை நன்கு அலசிக்கொள்ளலாம்.

வாரத்திற்கு இரண்டு முறை இதை பயன்படுத்தி வந்தால் தலைமுடி உதிர்வதை தடுத்து நீளமான கூந்தலை பெற மிகவும் உதவியாக இருக்கும்.

Back to top button