டொலரின் பெறுமதியில் வேகமான உயர்வு! சரியும் இலங்கை ரூபா
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்பிரகாரம், நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(09.06.2023) வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும், முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த நான்கு வாரங்களாக மீண்டும் அதிவேக வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றது. எனினும் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக ரூபாவின் பெறுமதி வேகமாக வீழ்ச்சியடைந்து டொலரின் பெறுமதி உயர்வடைந்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (09.06.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 301.12 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.08 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதற்கமைய, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 326.14 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 309.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 379.16 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 360.59 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.