வளங்களை அள்ளித்தரும் வராஹி அம்மன்: வழிபடும் முறை
வாராஹி தெய்வம் பன்றியின் முகத்தையும், ஒரு சக்கரத்தை கையில் ஏந்தியவாறும் காட்சியளிக்கிறார்.
வாராஹியிடம் நியாயமாக முன் வைக்கப்படும் கோரிக்கைகள் எதுவானாலும் உடனடியாக நிறைவேறும்.
தூய எண்ணத்தோடு விளக்கேற்றி வைத்து, வாராகி நம்முடன் இருப்பதாக நினைத்து நம்பிக்கையுடன் வழிபட்டால், வாராஹி அம்மனின் அருள் கிடைக்கும்.
வழிபடும் முறை
பஞ்சமி திதி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, முதலில் குலதெய்வம் மற்றும் விநாயகர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு வீட்டில் வாராஹி படம் இருந்தால் அதற்கு செவ்வரளி மலர் அல்லது சிவப்பு செம்பருத்தி மலர் சூட்ட வேண்டும்.வாராஹிக்கு உரிய மந்திரங்கள், ஸ்லோகங்கள் ஆகியவற்றை சொல்லி வழிபட வேண்டும்.
பச்சை கற்பூரம், ஏலக்காய் கலந்த பால், பானகம், தோளுடன் கூடிய உளுந்தால் செய்யப்பட்ட வடை, சர்க்கரை வள்ளி கிழங்கு, தயிர் சாதம், எள் உருண்டை படைத்து வழிபடலாம்.
முடியாதவர்கள் சிவப்பு நிற மாதுளை முத்துக்களை உதித்து படைக்கலாம்.வெற்றிலை,பாக்கு, பூ, பழம் வைத்து வழிபடலாம்.தேங்காய் பூ அல்லது சர்க்கரை கலந்த தேங்காய் துருவலை படைக்கலாம்.
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோர் வாராஹி ப்ரசோதயாத்
என்ற மந்திரத்தை 108 முறை ஜபித்து வணங்க வேண்டும்.
தொழிலில் ஏற்படும் பிரச்சனை, எதிரிகள் தொல்லை, ஏவல், பில்லி, சூனியம், கண் திருஷ்டி, தீராத நோய், கடன் தொல்லை போன்ற பிரச்சனைகள் உடனடியாக தீரும்.
திருமணம் ஆகாதவர்கள், குழந்தை இல்லாதவர்கள், காரண காரியங்களில் வெற்றி கிடைக்க வேண்டும், செல்வம் பெருக வேண்டும் என நினைப்பவர்களும் வாராஹி அம்மனை வழிபட பலன் கிடைக்கும்.