இலங்கை
யாழில் வைத்தியர்கள், சுகாதார பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்
யாழ். மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகள் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆகியவற்றின் வைத்தியர்கள், சுகாதார பணியாளர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இப்போராட்டமானது இன்றைய தினம் (21.09.2023) மதியம் 12 மணி முதல் 1 மணி வரையில் யாழ். வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் புத்திஜீவிகள் வெளியேறுவதை தடுப்பதிலும், அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு உள்ள தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதனையும் நோக்காக கொண்டே குறித்த போராட்டம் முனனெடுக்கப்படுவதாக தெரவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு தரமான மருந்துகள் அரச வைத்தியசாலைகளில் இருப்பதை உறுதிப்படுத்துவதிலும் அரசாங்கத்தின் மெத்தன போக்கை போராட்டக்காரர்கள் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.