ஆன்மிகம்

நினைத்த காரியம் நிறைவேற திங்கட்கிழமை வில்வ வழிபாடு

முப்பெரும் தெய்வங்களில் முதன்மையானவரும் மூவுலகை காப்பவருமான சிவபெருமானை வணங்க திங்கட்கிழமை மிகவும் உகந்த நாள். இது அனைவரும் அறிந்த ஒன்று தான். திங்கட்கிழமையில் சோமவார விரதம் இருந்து வழிபடுபவர்கள் வாழ்க்கையில் நினைத்த காரியங்கள் யாவும் எளிதில் நடந்தேறும்.

அத்தகைய சிவபெருமானை நம்முடைய வேண்டுதல் நிறைவேற திங்கட்கிழமையில் வழிபாடு செய்வது சிறந்தது. வேண்டுதல் நிறைவேற வில்வ வழிபாடு இந்த வழிபாடு செய்ய உனக்கு வில்வ இலை இருந்தால் மட்டும் போதும்.

ஒவ்வொரு தெய்வத்திற்கு உகந்த பொருட்கள் என்று ஒன்று இருக்கும். அந்த வகையில் சிவபெருமானுக்கு மிக உகந்ததெனில் இந்த வில்வ இலைகள் தான்.

அந்த வில்வ இலை மூன்று இலைகள் கொண்ட வில்வமாக இருக்க வேண்டும். அதை மட்டும் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். இந்த வில்வ இலைகளை 27 இலைகளாக எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வில்வ இலையிலும் ஓம் நமசிவாய என்ற வார்த்தையை எழுத வேண்டும்.

எழுதும் போதும் ஓம் நமசிவாய சொல்லிக் கொண்டே எழுதுங்கள். அதே நேரத்தில் உங்களுடைய வேண்டுதல் எதுவும் அதை மனதார பிரார்த்தனை செய்து கொண்டே எழுதுங்கள். அதன் பிறகு இந்த வில்வ இலைகளை பச்சை நிற நூல் அல்லது வெள்ளை நிற நூல்கள் மாலை போல கட்டிக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு சிவாலயத்திற்கு சென்று சிவலிங்கத்திற்கு இந்த மாலையை சாற்றி வழிபட வேண்டும்.

அதன் பிறகு அவர் முன் அமர்ந்து ஓம் நமசிவாய என்ற நாமத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். இந்த நேரத்தில் உங்கள் வேண்டுதலை வைக்க வேண்டியது மிகவும் அவசியம். அதன் பிறகு சிவபெருமான் ஆலயத்தில் உள்ள நடராஜப் பெருமானை தரிசித்து அவரிடமும் உங்கள் வேண்டுதலை வைத்து வேண்டுதலை விரைவில் நிறைவேற்றி தர அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஆலயத்தை சுற்றி வந்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

Back to top button