இலங்கை
சாதாரண பரீட்சை பெறுபேறுகளில் சாதனை படைத்த மட்டக்களப்பு வின்சன்ட் பாடசாலை; 56 மாணவர்களுக்கு 9A சித்தி!

நாடளாவிய ரீதியில் நேற்று வெளியாகியுள்ள கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் 56 மாணவர்கள் 9A பெற்று சாதனை படைத்துள்ளனர். வின்சன்ட் பாடசாலையில் 176 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்ததில் 56 மாணவர்கள் 9A சித்திகளையும். 19 மாணவர்கள் 8 A,B சித்திகளையும். 17 மாணவர்கள் 7A 2B சித்திகளையும் பெற்றுள்ளனர். இந்நிலையில் சித்தியடைந்த மாணவர்கள் பாடசாலை வளாகத்தில் பாடசாலை சமூகத்திடமிருந்து வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெற்றுக் கொண்டனர். பாடசாலை அதிபர் தவத்திருமகள் உதயகுமார் தலைமையில் இன்றைய நிகழ்வுகள் இடம் பெற்றது