உடல்நலம்

பல் வலியை இரண்டு நாட்களில் சரி செய்ய வேணுமா? இதோ சூப்பர் டிப்ஸ்

பொதுவாக உடலில் மற்ற வலியை ஏதாவது செய்து குறைத்துவிடலாம். ஆனால் இந்த பல் வலி வந்துவிட்டால் உயிரே போய்விடும்.

பல் வலி உடலுக்கு மிகவும் வேதனையளிக்கும். பற்களில் உள்ள வலியானது குழியின் காரணமாகவும் இருக்கலாம் அல்லது பாக்டீரியா தொற்று, கால்சியம் குறைபாடு அல்லது பற்களை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது போன்றவற்றையும் காரணமாக இருக்கலாம்.

இதனை ஒரு சில எளியவழிகள் மூலம் போக்கலாம். தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம்.

கிராம்பு எண்ணெய கடைகளில் கிடைக்கிறது. அதை வாங்கி பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட பற்களில் வைக்கலாம். இரண்டு கிராம்பை எடுத்து நசுக்கி ஆலிவ் ஆயிலில் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு அந்த எண்ணெயை காட்டனில் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் வைக்க வலி குறையும்.

பற்கள் பூண்டை எடுத்து நன்கு நசுக்கி அதனுடன் சிறிது உப்பு சேர்த்து குழைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் வைக்க வேண்டும். இப்படி செய்து வருவதன் மூலம் சொத்தைப் பல், பற்களில் உள்ள பூச்சிகள் மற்றும் தொற்நுக்கள் நீங்கும். வலியும் குறையும்.

ஒரு கிளாஸ் வெந்நீரில் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கலந்து அதை வாயில் ஊற்றி ஒரு நிமிடம் வரை அப்படியே வைத்திருங்கள். பின்பு நன்கு கொப்பளித்து வெளியே துப்பி விடலாம். இதை தினமும் இரண்டு முறை செய்து வந்தால் சொத்தைப்பல் மற்றும் தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சினையே வராது. வந்தாலும் வேகமாக குணமாகிவிடும்.

வெங்காயத்தை நசுக்கி சாறெடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சாறுடன் ஒரு சிட்டிகை அளவு மஞ்சளும் ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை காட்டனில் நனைத்து பல் வலி, பல் சொத்தை உள்ள இடத்தில் வைத்து சாறு இறங்கும்படி லேசாக அழுத்திப் பிடியுங்கள்.

ஒரு சிறிய காட்டன் பாலில் நனைத்து பல் வலி உள்ள இடத்தில் வைத்து அழுத்தி பிடித்து சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். இதை குழந்தைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது.

Back to top button