உடல்நலம்

நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமா? அப்போது இந்த ஜூஸை குடிங்க

கறிவேப்பிலை நம்முடைய சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

“கறிவேம்பு இலை” என்ற சொல் பிற்காலத்தில் கறிவேப்பிலை என்று அழைக்கப்பட்டது. கறிவேப்பிலையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் கொண்டுள்ளன.

கறிவேப்பிலையில், கார்போஹைட்ரேட்டுகள், ஃபைபர், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், தாமிரம் போன்றவை இருக்கின்றன.

வீடுகளிலும், வீட்டுத் தோட்டங்களிலும் கறிவேப்பிலை மரம் வளர்க்கப்படுகிறது. கறிவேப்பிலை சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. கறிவேப்பிலை இயற்கை நமக்கு கொடுத்த மாபெரும் கொடை.

தினமும் கறிவேப்பிலையை சாப்பிட்டால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று பார்ப்போம் –

மலச்சிக்கலுக்கு
கறிவேப்பிலையிலிருந்து எடுக்கப்பட்ட சாறு அல்லது கறிவேப்பிலையைப் பொடி செய்து உண்பதனால் வயிற்றுப் போக்கு குணமாகும். மேலும் கறிவேப்பிலையை மலச்சிக்கல் பிரச்சினையைச் சமாளிக்கக்கூடிய ஒரு மலமிளக்கியாகப் பயன்படுத்தலாம்.

சர்க்கரை நோய்க்கு
கறிவேப்பிலை ஜூஸை தினமும் குடித்து வந்தால் அதில் உள்ள பீட்டா கரோட்டீன், ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் விட்டமின் சி ஆகியவை இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவி செய்யும்.

உடல் எடை குறைய
கறிவேப்பிலை ஜூஸை தினமும் குடித்து வந்தால் இரு வேளை குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி உடல் எடையை குறைக்கும்.

கண் பிரச்சினைக்கு
கறிவேப்பிலை ஜூஸை தினமும் குடித்து வந்தால், கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளை தீர்க்க உதவி புரியும்.

முடி வளர்ச்சிக்கு
கறிவேப்பிலை ஜூஸை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம் விட்டமின் முடி உதிர்வதை தடுத்து, முடி செழித்து வளர உதவி செய்யும்.

இருதயத்திற்கு
கறிவேப்பிலை ஜூஸை தினமும் குடித்து வந்தால், கறிவேப்பிலையில் உள்ள பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட் ஆகியவை இருப்பதால் அது இருதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்யும்.

கறிவேப்பிலையை சாப்பிடக்கூடாதவர்கள்
அலர்ஜி உள்ளவர்கள், குழந்தை பெற்றவர்கள், கர்ப்பிணி பெண்கள் கறிவேப்பிலையை அதிகமாக சேர்த்துக் கொள்ளக்கூடாது.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி சரியான அளவில் கறிவேப்பிலையை எடுத்துக்கொள்வது சிறந்தது.

Back to top button